இயேசுவின் பின்னால்
அன்பை பகிர சொன்னீர்
அடுத்தவனை கெடுக்கிறோமே
பகைவனை மன்னிக்க சொன்னீர்
பார்க்கும்போதெல்லாம் நைய புடைக்கிறோமே
நன்மையானதை செய்ய சொன்னீர்
நன்றி கெட்ட தனமாய் வாழ்கிறோமே
தாய் தந்தையை மதிக்க சொன்னீர்
தரங்கெட்ட வார்த்தையால் சாடினோமே
சகோதரருக்கு உதவ சொன்னீர்
சந்தடி இல்லாமல் ஒதுங்கினோமே
கைதிகளை சந்திக்க சொன்னீர்
கையாலாகாத பொய் சாட்சி சொன்னோமே
என்று உம் பின் செல்வோம்
என்று உம் பாதம் நாடுவோம்.