காதல் -அமைதி

உன்னிடம்
காதலை சொல்ல
காலம் தாழ்தியதில்
ஆரம்பித்திருக்கிறது
வாழ்கை அழுகல் ,

உன் முகம்
பார்க்க
முச்சந்தில் நின்றதில்
முடிந்து போயிருக்கிறது
என் முன்னேற்றம் ,

உன் மீது
உயிர் வைத்து
பிணமாக
அலைந்திருக்கிறேன் ,

உலகம் நீ என
நினைத்து - என்
உருவம் மறந்து
கிடந்திருக்கிறேன் ,

உன் சம்மதம் வேண்டி
இளமை வசந்தங்களை
சமாதியாகியிருக்கிறேன்,

உன்னை நாடி நாடி
நட்பு வட்டதையும் ,
உத்திர உறவையும்
உறைய செய்திருக்கிறேன் ,

என் காதலை
நீ - மறுத்தபோது
நான் - மரணிப்பேன்
என்று நினைத்தாயோ ?
இல்லை
அன்றுதான்
புதிதாய் - பிறந்தேன் ,

புயல் ஒய்ந்ததாய் ,
பூகம்பம் ஒய்ந்ததாய் ,
சுனாமி முடிந்த்ததாய் ,
இதோ - என்னுள்
ஓர் அமைதி
சுகமாய் பரவிக்கிடக்கிறது .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ்பாபு ) (19-Mar-12, 6:59 pm)
பார்வை : 313

மேலே