நண்பன்டா

பெற்றதை மட்டுமே
சாதனையாக சொல்லி
மற்றவைகளுக்காக
குறை சொல்லி குறை சொல்லி
ஓரம்கட்டிய பெற்றோர் !

வாங்கி கொடுத்தபோது
வாழ்த்திவிட்டு ,
வாழகூபிட்டபோது
வந்த வழியே ஓடிவிட்ட காதலி !

மண்ணாசை , பொன்னாசை
மட்டுமே சொந்தம் கொண்டு
கணவர்களை
காலவதியாக்கிவிடும்
மனைவிகள் !

குறை சொல்லி
பொழுதுபோக்கி
சுயநல கூட்டம்போடும்
ஊர் பெருசுகள் !

சுயநலமே
இல்லாமல்
பொதுநலம் தாண்டி ,
குறை காணாத
குற்றம் காணாத
வசதி , ஜாதி , மதம் தாண்டி
உயிரையும் துச்சம் காணும்
நட்பே நட்பு !

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Mar-12, 9:44 pm)
பார்வை : 632

மேலே