கல்லறைப் புலம்பல்...

கவிதை எழுதும் நான்..!
என் காதலைச் சொல்லவா..!
இல்லை ;
அதன் காயங்களைச் சொல்லவா..!!!
இல்லையெனில் ;
என் கல்லறையின்
உறக்கத்தையும் கெடுத்த
அவள் நினைவுகளைச் சொல்லவா..!!!
இல்லையெனில் ;
என் கவிதையின்
புலம்பல்களைப் பற்றிச் சொல்லவா !!!
எதை நான் சொல்ல !?!
அவளின் மௌனத்தைத்தவிர...!!!