காணாமல் போன கவிதைகள்

காணாமல் போன கவிதைகள்
என்
காணாமல் போன
கவிதைகள் - கனவில் வந்து
நிற்கிறது அனு தினம்

காதலித்த காலங்களில்
இரவெல்லாம்
கண் விழித்து எழுதிய
வரிகளை பிரிந்த - வலி
காதலியை பிரிந்ததை விட
நிறையவே வலிக்கிறது ,

இளமை உணர்உகளை
மனதின் நிழல் உருவை
கனஉகளை
கண்ணீர் துளிகளை
கலை இலகியத்தை
பதிந்து வைத்த பதிஉகள்
தவறிபோனதில்
பறிதவிகிறது - மனம் .

பாதுகாத்து ,பத்திரபடுத்தி
பிற்க்காலத்தில்
கவிதை தொகுப்பாக்களாம்
என நினைத்தது
தொலைந்து போனதில்
கலைந்து போனது கனஉ ,

பகோடா திண்கையில்
பட்டாணி சுண்டல்
சுருட்டிய காகிதத்தில்
பஞ்சு மிட்டாய்
வாங்கும் பேப்பரில்
பழைய பேப்பர் கடையில்
இப்படி எங்கு கவிதையை
பார்த்தாலும் - எனை அழயிங்கள்
என் கவிதையாக இருந்தாலும்
யார் கவிதையாக இருந்தாலும்
கவிதைகள் காப்பாற்ற படவேண்டியவை .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ்பாபு ) (22-Mar-12, 7:15 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 205

மேலே