வறண்ட வாழ்வின் உயிர்ப்பு

கண்ணீர்த் துளி வீழ்ந்து பண்ணிய
புள்ளியொன்றின் எல்லைக்குள்,
சுதந்திரமாய்
கைகால் உசுப்பக்கூட
சந்தர்ப்பம் கிடைக்க மறுத்த
சபிக்கப்பட்ட வாழ்வு
நிர்ப்பந்தமாகிவிட்ட பிற்பாடும்,

சிறகுகளின் வீரியத்துடன்
விண்ணேகிக் கடக்கும்
கனவுகளும் கற்பனைகளுமே
வாழ்தலின் மீது
துப்பணியை உமிழ்ந்தாவது
ஈரப்படுத்துகின்றன

எழுதியவர் : இதயநேசன் (23-Mar-12, 8:49 pm)
சேர்த்தது : Imam Adhnan
பார்வை : 167

மேலே