ஆட்டுவிக்கும் ஆட்டுக்கொன்
சூடுவேன், நிலவுக்கு வானவில்லை.
உன்னை உறுதி செய்ய உதவியமைக்காக.
கூடுவேன், இருமுகம் ஒருமுகமாக்கி,
திருமுகம் மலர வைத்தமைக்காக.
ஊடுவேன், கூடலின் மந்திரத்தினால்,
மனம் மயங்கி உளறவைத்தமைக்காக.
தேடுவேன், தொலைத்த வாழ்க்கையை
தொலையவைத்த இன்பநிலவினை.
மிரண்டேன் விராவு கொங்கைகளின்
உரசல் உண்டாக்கின ஸ்பரிசம்.
ஆடுவேன், ஆட்டுவித்த ஆட்டுக்கொன்,
அறிமுகப்படுத்தின அரும்பாவைக்காய்.
வாடினேன், உன் பிரிவு துரத்தின
காமனின் களியாட்ட கவிதைகளால்.