கலைகள் எல்லாம் மெட்டு

ராகம் பந்துவராளி தாளம் ஆதி

பல்லவி

கலைகள் எல்லாம் அள்ளித் தருபவளே...இளம்
கன்னித் தமிழாய் திகழ்பவளே.............நல்ல (க)

அணு பல்லவி

புலமை பல தந்தே பாடவைத்தாய் - பணிந்தே
பூவை உன்னையே போற்றவைத்தாய் நல்ல(க)

சரணம்

வீணையின் ஸ்வரமாய் நீயிருந்தே ..பல
வியக்கும் ராகங்கள் இசைக்க வைத்தாய்
வா வா அமுதத் தேனே.....
எனக்கு
வற்றா கல்வி செல்வம் தருவாய்.... (கலை)

எழுதியவர் : ஸ்ரீ G.S. vijayalakshmi (25-Mar-12, 6:53 pm)
பார்வை : 353

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே