"வா..வாழ்ந்து பார்க்கலாம்"

கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட‌
கணிப்பொறிமுன் கண்கள் தேட‌
கழுத்திலேயே சுருக்கு கயிறை
கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை

காதலை கூட கருமியைபோல‌
குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட‌
கூரமான வாழ்க்கை

போக்குவரத்து நிறுத்தங்களில்
நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை
நிம்மதிக்காய் தேடும்
நிஜமில்லா வாழ்க்கை

கட்டியவளை அணைப்பதை கூட‌
கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த
கயமைதனமான வாழ்க்கை

மினுமினுக்கும் விளக்குகொளியில்
மிடுக்கான உடையில்
போதையில் மிதக்கும் வாழ்க்கை

இதுமட்டுமா வாழ்க்கை
இலைமீது மழைத்துளி
அதை கொட்டி விளையாட காதலி;

இமை இடையில் வரும்
இன்ப கண்ணீர்துளி
அதற்காகவே பிறந்த அம்மா

கிள்ளி விளையாடி
கிள்ளையோடு சண்டைகள்

பொறாமை கொள்ள உறவான‌
புன்னகிக்கும் சகோதரி

இப்படியும் ஒருவாழ்க்கை
இதற்குள்ளும் வா...........!
வாழ்ந்து பார்க்கலாம்...........

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (26-Mar-12, 5:53 pm)
பார்வை : 249

மேலே