"எவன் புனிதன்"
![](https://eluthu.com/images/loading.gif)
தவறு செய்யாத மனிதன் எவன்டா......?
தரணியில் இருந்தால் கூட்டி வாங்கடா......!
துணிந்து தினமும் எதுவும் செய்.....
தவறு ஏதுமில்லை இதுதான் உண்மை...
எதுவும் எவனுக்கும் சொந்தமில்லை
உலகில் நிரந்தர பந்தமில்லை
அடுத்த நொடிக்கு ஆதாரமில்லை
நீ செய்வதெதுவும் தவறில்லை
இங்கே எவனும் புனிதனில்லை.;
கால்வயிறு கஞ்சிக்கு காசில்லாமல்
கழுத்தறுக்கவும் காத்திருக்கிறான்;
தன்சோறு நிலைக்க அடுத்தவன்
அன்னத்தில் விஷம் வைக்கிறான்;
பொண்டாட்டி கூட பொக்கிஷமாய் இல்லை
வெளியே போனவன் வருவதற்குள்
வேலைக்கு வேறு ஆள்பார்க்கிறாள்
வெட்கமில்லாமல் இவனும்
வேசியென பெயர் சூட்டுறான்
பிள்ளையும் இங்கு நல்லால்லே...
தாங்கும் வரை தந்தையென்கிறான்
தாங்கவேண்டிய நிலையில்_இந்தா
கந்தை என்கிறான்..இருமாப்போடு
காசுக்கும் காமத்துக்கும் அலையும்
காவாலிபய உலகமிது_இங்கே
எங்கே இருக்கிறான் புனிதன்......?
ஓரிருவந்தான் இங்கு மனிதன்...
ஒருவனும் இல்லை இங்கு
புனிதன்.............