இரவு பூக்கள்

விரிந்து கிடக்கும்
விண் சோலையில்
பூத்து குலுங்கி
இரவொன்றை பகலாக்க
போரிட்டு
விண்ணோடு உரசி
காரிருளை கறைத்திட்டு
மரகதவொளி வெள்ளத்தில்
மின்னி விளையாடும்
இரவு பூக்கள்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (27-Mar-12, 9:41 pm)
பார்வை : 270

மேலே