குடிசை

ஓலைகளில் கட்டிய குடிசை
சாலையின் ஓரத்திலே

மழை வரும் பயமோ
ஏழையின் ஐயத்திலே

கழிப்பிடம் இல்லாமல்
வழிநடையில் இருக்க

நாற்றத்தால் முழ்கி காணும்
தோற்றத்தால் முகம் சுழிக்கபிறர்

தாயால் பெற்ற குழந்தை
நோயால் தவிக்க

குடிகொண்டிருக்கும் குழந்தையின்
குடிசையில் நாற்புறமும்

விரிசலால் சுவர்கள்
கரிபட்டிருக்க அடுப்பிலே

உலை காய்ந்து கொண்டிருக்க
விலை கேட்கிறாள் அரிசி கடையிலே

கதறல் சப்தம் கேட்டு கைகால்
உதற சென்று பார்க்கிறாள்

தாயால் பற்ற வைத்த
தீயால் பற்றியது குடிசை

மாற்றங்கள் வரலாம் கட்டிடத்திலே
ஏற்றங்கள் வருமா குடிசைக்கு ....

எழுதியவர் : பூபதிராஜா tharamnagalam (29-Mar-12, 8:38 pm)
சேர்த்தது : boopathirajatharamangalam
பார்வை : 230

மேலே