என்னவள்!!
என்னவளே
என் இதயத்தை திருடியவளே
அநாதை குழந்தைகளுக்கு
அன்னையாய் இருப்பதே
என் வாழ்கை இலட்சியம் என
சபதம் எடுத்தவளே !
நான் உண்மைக்கான போராளி என்று
வீர முழக்கமிட்டவளே !
நான் ஏழை தாயின் வயிற்றில் பிறந்தாலும்
நான் அன்பு என்னும் செல்வத்திற்கு அதிபதியானவள்
என் செல்வத்தை அனைவர்க்கும்
கொடுத்து அகம் மகிழ்வேன் என்று
ஏகாந்த புன்னகை உதிர்தவளே!
தன்னாலும் முடியும் என்ற இலட்சிய வெறியோடு
விளையாடும் பருவத்தில் கூட பல
வேலைகள் செய்து பட்டம் பல பெற்று
இன்று பண்பாட்டின் சின்னமாய் என் இதயத்தில்
நிறைந்து நிற்கிறாயே!
உள்ளங்கள் அனைத்தும் கருணை ஊற்றாய்
தன்மான தவ புதல்வியாய்
என்னிதையத்தை நெருட வைக்கிறாயே!
நீ எனக்கு மனைவியாகலாம்!
ஆனால் நீ திக்கற்றவர்களுக்கு தாய்!
நீ இத்தேசம் பெற்றெடுத்த சரித்திரத்தின்
எதிர்கால குறியீடு!
உனக்கு உண்மைதான் பிடிக்கும்
ஆனாலும் எந்தன் பொய்யை கூட ரசிப்பாய்
என்னென்றால் என் மீதான உந்தன் நம்பிக்கை.
ஆம்! மறந்தும் ஒருபோதும் மன்னிக்க முடியாத துரோகத்தை நான் கனவிலும் நினைக்கமாட்டேன் என்ற அதீத நம்பிக்கை
அதனால் தான் நீ என்னவளோ ?