குடி கோவிலையும் அடிக்கும்...

எட்டி உதைத்தேன்
தொட்டு ரசித்தாள்...!!!
என் வருகைக்காய் தினம் தினம்
அவள் வருகைப்பதிவேட்டில்
வாந்தியும் மயக்கமும்...!!!
பத்திரமாய் பெத்தெடுக்க
பத்தியமே சாப்பாடு....!!!
ஈரேழுத்திங்களுமாய் என்
நினைவே அவள் வாழ்க்கை...!!!
முதன் முதலாய் நான் அழுவ
சாவின் எல்லைவரை சென்று வந்தாள்...!!!
மறு நொடியே புன்னகை செய்தால்
மலரை பெற்றுவிட்டோம் என்று...!!!
இப்படியாய் எனக்காக,
நித்தம் ஒரு யுத்தம் செய்து
பெற்று வளர்த்த அன்னையை ;
இன்று எட்டி உதைத்தேன்
குடிகாரனாக...!!!