மகரந்தக் குழந்தை
மகரந்தம் மவுனமாகும்
மலர் இதழ்கள் அதற்காய் பேசும்
பெண் கேட்டு பட்டாம் பூச்சி வரும் - அதன்
கால் பிடித்தே கட்டி வைக்கும்
கல்யாண மகரந்தங்கள்
கணவன் வீடு தேடி சென்று விடும்
காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அப்போது
காற்றில் மகரந்தக் குழந்தை வரும்