"இசை ஞானி"

சின்னதாயின் செல்லமகன் ராசய்யா
சிர்லிர்க்கும் இசையின் ராசா ஐயா
அன்ன கிளி கன்னத்தில் முத்தமிட
ஆனந்தத்தில் அவர் மனம் சத்தமிட
அதுவே இசையாகி போனது
எட்டு திக்கும் கட்டுக்கடங்காமல் ஆடுது

அவர் வீணையின் அறுந்த நரம்பு
அழுது புலம்ப;ஆறாய்
அதில் அவதரித்தான புதுராகங்கள்;

"என்னபோல தானே ஆத்தா
உன்ன பெத்து போட்ட"
எடுத்து இதுக்கு மெட்டு போட்டா
முத்தமிட்டு கொஞ்சினாள்
பெத்த ஆத்தா....

நெத்தி வியர்வை சொட்ட
நிலத்தில் அது கொட்ட
ஞானத்தை புது தாளம் தட்ட
புலத்தை இசை கொத்த
கட்டைவிரல் கட்டை தட்ட
கானமாய் அது காதை எட்ட
மனதை மயக்கிய
மந்திர பாட்டாளி.....
இசைக்கு இசைந்து
குரல் அசைக்கும் அவர்
அதன் கருவறை கூட்டாளி;

உணர்ச்சி நரம்பில் உரசி
புணர்ச்சி இசை மீட்டும் பாட்டன்
காற்றின் முளை முடுக்கெல்லாம்
இசைகட்டி போட்ட குழலிசை கூத்தான்;

விருதுகள் அவை இசைநடந்த
தெருவெல்லாம் குவிய
பெருவெள்ளமாய் பின்வந்தவை
வரிசையில் நிற்கின்றன
வாங்கத்தான் அவர்க்கு நேரமில்லை
பாவம் அவை...!!

சிந்து பைரவியில் சிந்திய இசை
கிதஞ்சலியா கால்முளைத்து ஓட
சாந்த தாளங்களுக்கு நேரமேது
சற்றே மறந்து ஓய...

மென்மேலும் வளரும் புகழோடு
மேலே மேலே பறந்து
எட்டா உயரே நீ இருந்தாலும்
காற்றில் நாம் குடும்பமானோம்
இசை நான் நீ
சரி தானே இசைஞானி...?!?

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (7-Apr-12, 3:24 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 174

மேலே