தமிழ் ஈழ மக்களின் கண்ணீர்க் கதறல்

முள் வேலிக்குள்
சிக்கித்தவிக்கும்
ரோஜாப் பூக்கள் நாங்கள்...

எங்களின் கண்ணீர்
கலந்ததாலோ என்னவோ
இக்கடல் நீரும்
உப்பை இருக்கிறது!

புழுதியில் புரண்டு
விளையாட
ஆசைப் பட்டுதான்
இப்பூமியில்
வந்து பிறந்தோம்
எங்களை
புழுவுக்கு
இரையாக்கிவிட்டார்களே

என்
கருவறையையே
என் குழந்தைக்குக்
கல்லரையாக்கிவிட்டார்களே

பட்டாம்பூசிகளாய்ப்
பறந்துதிரிந்த
எங்கள்
பிள்ளைகளுக்கு
பாடைகட்டிவிட்டார்களே

கோடிக் கனவுகள்
லட்சம் ஆசைகளைக்
கொண்டு
இருக்கவில்லை நாங்கள்

உயிரோடு
வாழவேண்டுமென்ற
ஏக்கத்தோடு மட்டுமே
தவித்துக்
கொண்டிருக்கிறோம்

பிஞ்சுக்
குழந்தைகளைக் கூட
பஞ்சு பஞ்சாய்ப்
பிய்த்துத் தள்ளும்
இக்கொடிய மிருகங்களை
என்னவென்று சொல்ல!

செவ்வானம் கூட
நாங்கள்
சிந்திய
செந்நீரின்
எதிரொலிப்புதானோ என்னவோ...?

கடல் நீர்
வற்றினால் கூட
எங்கள்
கண்ணீர்
வற்றாது போலும்

கரம் கூப்பிக்
கேட்கிறோம்
எங்களை
காப்பாற்ற வருவீர்களா
தோழர்களே...?

எழுதியவர் : சுதந்திரா (19-Sep-10, 9:56 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 467

மேலே