பயணங்கள் பிடிக்கவில்லை
தனித்த பயணங்கள்
பிடிப்பதில்லை
காரணம்
கண்கள் காணும்
இடங்களெல்லாம்
கலர்புல்
காட்சிகளாய்
பல கலர்கள் !.....
பச்சை மஞ்சள்
தாவணி புடவையில்
தமிழ்நாடும் !..
வெள்ளைபட்டில்
கேரளாவும் !..
டைட் பேன்ட்
ஜீன்ஸில்
கர்நாடகாவும் !..
இருந்தும்
என்ன செய்ய
தனித்த பிகரை
கணக்கு செய்ய
முயற்சிக்கும் முன்னே
கணக்கை
முடித்து வைத்திருக்கிறான்
ஒருவன் !..
பக்கா பிகருக்கு
சற்றும்
பொருத்தமில்லா
பையன் !..
ஒருவனுக்கு ஒருத்தி
என்றில்லாமல்
இருவருக்கு ஒருவனாய்
அவன் !..
இந்த இதமான
தென்றலில்
வாடை கலந்து
வருவது
அவன்
வறுக்கும்
கடலையினால் அல்ல !..
என்
மனம்
நொந்து எறிவதால் !..
என்னவளே !
எங்கேயடி இருக்கிறாய் ?
சீக்கிரமாய் வாயேன் !..
ஏனெனில் ?
நீயும் !..
நானும் !.. சேர்ந்து
என்னை போல்
இன்னொருவனின்
மனதை
எரிய வைப்போம்!......