திரையில் சொல்லாத காதல் கதை

திருநெல்வேலி மானூரில் உள்ள அயூப்கான் புரம் என்ற ஊரில் அன்பு ,தமிழ் ,இரு இணைபிரியாத நண்பர்கள் .இவர்களின் நட்புக்கு இலக்கணம் இல்லை அப்படி ஒரு நட்பு .இந்த நட்பை உறவாக்கிகொள்ள தமிழின் தங்கையை அன்புக்கு திருமணம் முடிக்கிறார்கள் சந்தோஷமாக நாட்கள் செல்ல அன்புக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது .....
தமிழுக்கு திருமணம் முடிக்க பெண் தேடுகிறார்கள் .."கிராமத்து பெண் வேண்டாம் என் நண்பனுக்கு சீமையில்தான் பெண் பார்க்கணும் ஒரே பிடிவாதம் பிடித்தான் அன்பு ..இதனால் பட்டணத்தில் பெண் கிடைக்கிறது
திருமணமும் நடக்கிறது ....இரு குடும்பமும் ஒன்றாக எந்த பிரட்சனையும் இல்லாமல் வாழ்க்கை பயணம் தொடர்கிறது ..
தமிழ் மனைவி பட்டனத்து பெண் என்பதால் கிராமத்து வாழ்க்கை சற்று சங்கடமாக இருந்தாலும் அன்பு தமிழ் இவர்களின் நட்பான வாழ்க்கை இவளுக்கும் பிடிக்கிறது ..கிராமத்தில் வாழ்க்கை பழகிகொள்கிறாள்.....இதற்கிடையில் தமிழின் மனைவி கர்ப்பமாகிறாள் "ஏல தமிழு உனக்கு பொம்பளபுள்ள பொறந்தா எம்மவனுக்குதான் கட்டிகொடுக்கணும்.."என்ற அன்பின் சொல் பலித்துவிட்டதோ என்னமோ தமிழுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது
அன்று பக்கத்து ஊரில் திருவிழா எல்லோரும் ஒரு வண்டி எடுத்து திருவிழாவுக்கு செல்கிறார்கள் .திருவிழா முடித்து ஊருக்கு திரும்பும்போது.யார் கான்னு பட்டதோ ஒரு விபத்தில் எல்லோரும் சிக்கிகொள்கிறார்கள்.யாருக்கும் அவ்வளவு பெரிய அடி இல்லை ஆனால் அன்புக்கு மட்டும் கால் துன்ன்டிக்கப்படுகிறது ..மருத்துவர் "இனிமேல் அன்புவினால் நடக்கமுடியாது சின்னபுள்ள மாதுரி பார்த்துக்குங்கக "என்றார் மருத்துவர். தன் நண்பன் அதுவும் தங்கையின் கணவன் தன் தங்கை ஒரு ஆண்புள்ள வைத்து எப்படி குடுப்பம் நடத்தும் இதனால் இரண்டு குடுப்பமும்
தமிழ்தான் பார்த்தான்....
ஒருநாள் அன்புக்கு முடியாமல் போக மரணதருவாயில் வருகிறான் அப்போது தன் மகனையும் தன் நண்பன் மச்சானுமாகிய தமிழை அழைத்து "மகனே நீ எந்த நேரத்திலும் உன் மாமனை கைவிடக்கூடாது .உன் மாமன் மகளை நீதான் கட்டவேண்டும் 'அந்த பிஞ்சு மனதில் காதலை விதைத்தான் அன்பு பிறகு தமிழிடம் என்குடும்பத்தை கைவிட்டுவிடாதே உன் புள்ளையை இவனுக்கு கொடுத்துவிடு என்றா சொல்லியபடி அவன் மூச்சி நிற்கிறது .........
தன் நண்பனின் இறப்பு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை இவை அனைத்தும் தமிழை மட்டுமல்ல எல்லோரையும் பாதித்தது இதனால் இடத்தை மாற்றிக்கொள்ளலாம் என எண்ணி பட்டணத்திற்கு போகிறார்கள் அன்புவின் மனைவியை தவிர ......
பட்டணத்தில் ரயிலில் இறங்குகிறார்கள் தண்ணி குடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அன்புவின் மகன் செல்கிறான் ஆனால் வழி தெரியாமல் தவறி விடுகிறான் .எங்கெல்லாம் தேடியும் அவன் கிடைக்கவில்லை
அன்புவின் மகன் பசியில் அழுகிறான் அம்மா அம்மா என்று அழுகிறான் ஒரு இடத்தில் அப்போது ஒரு காரில் ஒரு தம்பதி செல்கிறது அதில் இருந்த ஒரு பையன் அவனை பார்கிறான் "அப்பா அதோ பாருங்கள் "அந்த தம்பதி அன்புவின் மகனை பார்த்து "யாரப்பா நீ .உன் பெயர் என்ன எந்த ஊருடா ."என கேட்கிறார்கள் அவனின் அம்மா உருவம் அப்பாவின் கடைசியில் சொன்ன வார்த்தை மட்டும் நினைவில் உள்ளது எதுவும் தெரியவில்லை "சரி என் வீட்டுக்கு வா "என அழைத்து செல்கிறார்கள் அவனின் பெயர் ராஜ என் வைக்கிறார்கள் அதற்கு முன் அவன் பெயர் செல்வன் ....
அந்த தம்பதி "இதோ உன்னுடைய நண்பன் ரவி "என தன் மகனை அறிமுக செய்கிறார்கள் ....இனி ரவியும் ராஜாவும் நண்பர்கள் என்ன "
காலங்கள் ஓடுகிறது வாலிப பருவம் அடைகிறார்கள் ராஜாவும் ரவியும் ...ஆனால் எத்தனை காலம் போனாலும் தன் அம்மாவின் முகமும் அப்பாவின் கடைசி வார்த்தையும் மனதை விட்டு பிரியாமல் இருக்கிறது ... கற்பனையாக அவன் மாமன் மகளை உயிராக காதலிக்கிறான் ... இந்த நிலையில் ராஜாவின் உருவம் அவனின் மனசு குணம் எல்லாவற்றையும் பார்த்து ஒரு பெண் காதலிக்கிறாள் ராஜாவை அவள் தான் ராத .அதை ராஜாவிடம் சொல்கிறாள் .ஆனால் அந்த காதலை ராஜ ஏற்றுக்கொள்ள வில்லை ஏன் என்றால் அவன் மனதில் அவன் மாமனின் மகள் இருக்கிறாள் ..இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்ச்சி செய்கிறாள் ராத . அவளை காப்பாற்றுகிறான் ரவி .........
இப்போது ரவிக்கும் ராதாவுக்கும் காதல் மலர்கிறது ..."அப்பாட நம்மாளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை "ராதா ,ரவி காதலை ராஜ ஆதரித்து அவர்களின் காதலை வளர செய்கிறான் .ஆனால் அவனின் அந்த மாமன் மகள் மனதில்வாழ்கிறாள் .ராஜாவுக்கு ...காலம் கடற்கிறது
ஒரு நாள் ராதா வீட்டில் அவளின் அப்பா கட்டிய புது வீட்டுக்கு கிரக பிரவேசம் நடக்கிறது அதற்கு ராஜ ,தன் காதலன் ரவி தன் நண்பர்கள் எல்லோரையும் அழைக்கிறாள் ராதா அதே போல் எல்லோரும் செல்கிறார்கள் வீட்டின் மூன்னாடி ரோடு ,ரோட்டை கிராஸ் பண்ண ரவி ராஜ அவர்களின் நண்பர்கள் நிற்கிறார்கள் .அதற்குள் அவள் வீட்டில் எல்லா பூஜைகளும் நடக்கிறது அப்போது அங்கே ஒரு அம்மா குத்து விளக்கு ஏற்றுகிறாள் ....
"சீக்கரம் வாங்கடா குத்துவிலக்கெல்லாம் ஏற்றுவிட்டாச்சு "ராஜ மட்டும் நிற்கிறான் முள் குற்றி .
"வாங்க ராஜ என்றாள் ராத ..அப்போதுதான் விளக்கு ஏற்றும் பெண்ணை பார்க்கிறான் ராஜ ."யார் அந்த பெண்மணி ராத "
ராஜ கேட்டான் "அவங்கதான் என் அத்தை அப்பாக்கு தங்கை "என்றாள் ராதா .. இடியே விழுந்தது ராஜாவுக்கு ஏன் என்றால் அந்த குத்து விளக்கு ஏற்றும் பெண் தான் ராஜாவின் அம்மா ..................... இது ராஜாவுக்கு தான் தெரியும்
" எனக்கு ஒரு வேலை இருக்கு பெய்விட்டு வருகிறேன் ..ராஜ கிளம்பினான் நண்பனாச்சே கூடவும் சென்றான் ரவி .....
ராதா வீட்டில் கல்யாண பேச்சு நடக்கிறது "அண்ணே என் மகன் செல்வன் எப்படியும் வந்துவிடுவான் அவனுக்குதான் உன் புள்ளைய கொடுக்கணும் "என்றாள் ராதாவின் அத்தை அதாவது ராஜாவின் அம்மா ..
எப்படி நான் யாருக்கும் கொடுப்பேன் என் நண்பனாச்சே உன் புருஷன் உன் பையன் செல்வம்தான் என் மருமகன் "என்றான் ராதாவின் அப்பா அதாவது ராஜாவின் மாமா ....
ராதா, ராஜ ரவி இருக்கும் இடத்திற்கு வருகிறாள் ..."ரவி என் வீட்ல கண்யான பேச்சு நடக்கிறது..நீ வந்து பேசு என்னங்க ராஜ நீங்க வந்து அப்பா விடம் பேசுங்க "தன் மனதில் உள்ள காதலி அப்பாவின் ஆசை அவள் அவளின் கல்யாணத்திற்கு தன்னையே பேச அழைக்கிறாளே.மனதில் அழுகிறான் ராஜா.....
"நான் மட்டும் உன்னை கல்யாணம் செய்யவில்லை என்றாள் செத்துவிடுவேன் "ராதா "நான் மட்டும் இருப்பேனா "ரவி
தன் நண்பன், தன் நண்பனின் காதலி தான் மனதில் காதலித்த காதலி இருவருக்கும் இடையே ராஜா .......
சரி நாளைக்கு உன் அப்பா ஆபிசுக்கு போய் நாம் மூன்று பெரும் பேசுவோம் அதற்கு ஒத்திகை பார்க்கலாம் என்றான் ரவி சரி ரவி சொன்னான் "நான் ராதாவின் அப்பாவாக இருக்கிறேன் நீ தான் நான் என்னடா ராஜா வா வந்து பேசு
ராஜ ஒத்திகையில் பேசினான் "மாமா எப்படி இருக்கிறீங்க ?" "டே மாமா என்றே சொல்லிட்டியா சார் என்று சொல்லு "ராதாவும் ரவியும் சிரிக்கிறார்கள் உண்மை அவர்களுக்கு தெரிவதில்லை .....சரி எப்படியோ பேசு ரவி சொன்னான்
ராஜா ஒத்திகையில் "ராத எனாக்காகவே பிறந்தவள் என்று சொல்லி முடிப்பதற்குள் ஓ என அழுதான்.. டே என்னடா நடிக்கசொன்னால் இவ்வளவு எமொர்சன் ஆகிறாய் ......மீண்டும் உண்மை அவனுக்கு தெரியவில்லை
தன்னை சோறுபோட்டு வளர்த்தவர்கள் ரவியின் குடும்பம்.காதலின் வலி தனக்கு ஏற்பட்டதுபோல தன் நண்பனுக்கும் தன் மனது காதலிக்கும் ஏற்படக்கூடாது என்று.. ஒரு முடிவு எடுக்கிறான் ராஜ ...ரவியிடமும் ராதாவிடமும் ராஜ சொல்கிறான் "ரவி நீ வந்து அந்த அம்மாவின் மகன் கானவில்லைலோ அதனாலே அந்த காணாமல் போன மகனாக போ" அதாவது தன் இடத்தில் அவனை அனுப்பிகிறான் i
அதனை ராதாவும் ஏற்கிறாள் அதேபோல ரவியும் அந்த கிராமமான அயூப்கான் புரத்திற்கு செல்கிறான் அவனை ஊர் மக்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள் .வா செல்வம் என்கின்றனர் அப்போதுதான் காணாமல் போனவன் செல்வன் என்பெயர் கொடவன் போல என நினைக்கிறான் ரவி ஆனால் தன் நண்பன் ராஜா தான் என தெரியாது அவனுக்கு .. ஐந்து நாள் அங்கே இருக்கிறான் அந்த அம்மாவின் அன்பு பாசம் இவனை கண்கலங்க செய்கிறது சில பொருள்களை காட்டி இது உன்னுடைய சின்ன வயதில் பயன் படுத்தியது என்று அந்த தாய் சொகிறாள் அதை எடுத்து வைத்துக்கொள்கிறான் ரவி..
ரவி திருப்ப பட்டணத்திற்கு செல்கிறான் அங்கே ராதாவும் ராஜாவும் வரவேர்கிரார்கள் ராதாவுக்கு ஒரே குசி ..ராஜா
மெல்லிய குரலில் அம்மா எப்படி இருக்காங்க ? அந்த ஊர் எப்படி உள்ளது? மக்கள் எப்படி இருக்கிறாங்க?என கேட்டான் ஒரு நிமிஷம் "ம்ம் ராதா அப்புறம் வா என ராதாவை அனுப்புகிறான் ரவி ........பின்பு ராஜாவிடம் அந்த பழைய பொருளை காட்டுகிறான் "டே பாருடா" இதை பார்த்ததும் அழுகையை அவனால் அடக்க முடியவில்லை பார்க்கிறான் என் என்றால் தான் பயன் படுத்துயது ஆயிற்றே ஆனாலும் அழுகையை தன் நண்பனுக்கு தெரியகூடாது என்பதற்காக ...
ரவி சொல்கிறான் "என்னால் ராதாவை மறக்க முடியாது ஆனால் அந்த அம்மாவை என்னால் ஏமாற்றமுடியாது பாவம் டா எவ்வளவு பாசம் வைத்திருக்காங்க தெரியுமா அந்த கள்ளம் கபடம் இல்லாத தாய் மனசை ஏமாற்றமுடியாது ...மேலும் அந்த உண்மையான மகன் வந்தால் .....ரவி கொட்டி தீர்த்தான் , அந்த மகன் வரமாட்டான் எனக்கு தெரியும் அந்த அம்மா சந்தொஷமாகதானே இருந்தாங்க அப்பா என்னஅதற்குள் இரவு வெகு நேரம் ஆகி விட்டது
அதிகாலையிலே ராத இவர்களின் வீட்டு கதவை தட்டுகிறாள் "எங்க அத்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்லை இவ்வளவு நாளா மகனை பிரிந்து இருந்தாங்க இப்ப நீ போய்விட்டு வந்ததில் இருந்து அதே நினைப்பில் ரொம்ப உடம்பு சரியில்லாமபோச்சு என்றால் ராதா .. உடனே போ ரவி "என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டால் ... "நான் போகவில்லை அந்த தாயை நான் ஏமாற்றவில்லை என்கிறான் ரவி ...ராஜ நீ கண்டிப்பாக போடா என சொல்கிறான் ..
இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது அப்போதுதான் "டே அது யாரும் இல்லை என்னோட அம்மா டா "என்கிறான் அப்போதுதான் உண்மை புரிகிறது ரவிக்கு ...........
ராதாவை மறக்கமுடியாது அந்த தாயை ஏமாற்றமுடியாது தன் நண்பனின் காதலிதான் ராத எனவும் தெரிகிறது ரவிக்கு ..தன் உயிரை விடுகிறான் ரவி இதை கேள்வி பட்ட ராதாவும் உயிர் விடுகிறாள் இப்போது பைத்தியமாய் அலைகிறான் ராஜ ................................
(அன்பர்களே முடிவு இப்படிதான் இருக்க வேண்டும் ராதாவை ரவி திருமணம் செய்தால் தன் அப்பாவின் சபதத்தை ரவி மீறி இருக்கும் இதனால் ரவியும் ராஜாவும் நண்பர்களாக இருக்கமுடியாது சரி ராஜாவுக்கு ராதாவை ரவி விட்டுக்கொடுத்தால் நட்பு நன்றாக இருக்காது இதனால் தான் அவர்களை இறக்கும்படி செய்தேன் இந்த கதையில் )

எழுதியவர் : தபரேஜ் (10-Apr-12, 8:51 am)
பார்வை : 1221

மேலே