உன்னை விரும்புவதா... ?! இல்லை...விலகுவதா...?!

முன்பின் அறியா ஊர்...
முகம் தெரியா மனிதர்கள்...
முதல் நாளின் முடிவையும்
மறுநாளின் தொடக்கத்தையும் குறிக்கும் நேரம்...
முற்றிலும் புதிதான அந்த
பேருந்து நிலையத்தில் அத்தனை
கூட்டத்தின் இடையிலும்
தனியாக நான் .....

ம்ம்..ஹும்ம்ம்...தனியாக இல்லை...!
ஏனெனில்
நான் எப்போதும்
உன் நினைவுகளின் துணையோடு...

உன்னை பிடிக்கவில்லை
என்ற நான்தான்
இத்தனை தூரம்
வந்திருக்கிறேன்
உன்னை தேடி ...?!

உன்னை விரும்புவதா... ?!
இல்லை...விலகுவதா...?!

எழுதியவர் : அன்பு.இளமாறன் (10-Apr-12, 5:05 pm)
பார்வை : 186

மேலே