சட்டென்று மாருது வானிலை :

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சூரியன் பிரகாசமாய் ஜொலித்துகொண்டிருக்க,,
அவ்வொளியை பூமி தன் மேலாடையாய் போர்த்திக்கொண்டிருந்த தருவாயில்,
அவ்வழியே காற்றோடு கைகோர்த்து பயணித்து கொண்டிருந்த கரும்மேகங்கள் களைபுற்று அச்சூரியன் முன் இளைப்பாற துவங்கியது,,,,,
இதனை கண்டு அம்மேகங்கள் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்த மரங்கள் இன்ப வெள்ளத்தில் ஆட தொடங்கின,,,,
இவர்கள் உத்தரவை எதினோக்கி அங்கணமே காத்துக்கொண்டிருந்த மேகங்களை பார்த்து மெல்ல தலை அசைத்து மரங்கள் உத்தரவிட தங்கள் பயணத்தை பூமியை நோக்கி ஆரம்பித்தது,,,,
அத்துளிகள் மண்ணுடணும் இலைகளுடணும் கட்டி தழுவ மிகுந்த ஆரவாரத்துடன் குதித்து விளையாடிய பொழுது மண்ணும் தனது நறுமணத்தை எழுப்பி பரிசளித்தது,,,,
இவ்வண்ணம் அண்டம் முழுவதும் வானவேடிக்கை என திருவிழா கோலம் பூண்டது!!!!! 

எழுதியவர் : கே.பிரிதிவிராஜ் (15-Apr-12, 4:28 pm)
பார்வை : 234

மேலே