காவிரி பொங்கி வருவாயா
அம்மா காவிரி
ஆடி வந்ததே
அலையாக நீ எங்கே
தமிழகம் நீயின்றி
உன் வரவின்றி வரண்டு
தவிப்பதை கண்டாயா
வரமறந்தாய
வழியை மாற்றினாயா
வழியெங்கும் சிறைகள் சிக்கினாயோ
நீயின்றி உன் பிள்ளை நாங்கள்
பாலின்றி மடிகின்றோம்
எங்கள் அவல குரல் கேட்டு
நீ தேடி வருவாயா
அம்மா பொங்கி வருவாயா