வன்முறை வேண்டாம்
அன்பு சகோதரா
வன்முறை தீயிட்டு - நீ
அமைதியை எரித்திடல் நலமா
சாதி மதம் இனம் நாடு - என
நாம் பேசும் மொழி கடந்து
நாம் மனிதர் என்பதை புரிவாயா
ஒவ்வொரு மனிதரும் - நம்
சகோதரர் என்பதை - நீ
அறிவாயா அன்பு செய்வாயா
நம் உறவின் உயிரினை
பறித்திடும் வன்முறை எரிந்திடு
மன்னிப்போம் மறப்போம்
பெருந்தன்மை வளர்த்திடு
மகிழ்ச்சி உலகம் தழைத்திட - நீ
என்றும் ஓற்றுமை பேணிடு