கற்பனை வசப்படும்

ஒவ்வொரு மனிதருள்ளும்
பல கோடி கருக்கொண்ட
கற்பனைகள் உண்டு
அவை கனவுகளாய்
பல நாட்கள் உறக்கத்தில்
வந்து நம்மோடு வாழ்வதும் உண்டு

அப்பப்போது ஆசைகளாய்
சிறகடித்து கனவு உலகில்
நாம் சிலாகிப்பதும் உண்டு
நனவுகளாய் சில நிறைவேறும்போது
உணர்ச்சி பொங்கிட
உள்ளம் பூரிப்பதும் உண்டு

கற்பனை வளம் இருந்தால்
அது நலமென இருந்தால்
கனவு உலகம் கலைந்து
நனவு உலகிற்கு முனைந்தால்
இலக்கு எதுவென இருந்தாலும்
அது நம் வசப்படும்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (16-Apr-12, 11:43 pm)
பார்வை : 319

மேலே