தொடரும் மாணவர் தற்கொலை:
தாம் பெற்ற துயரத்தை
தம் பிள்ளை பெற வேண்டாம் என்று
சிறு வயதிலிருந்தே அவர்கள்
கேட்டதை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்;
செல்லமாய் தான் பிள்ளையை வளர்கின்றீர்
அதில் ஒன்றும் தவறில்லை
தன்னம்பிக்கையும் சேர்த்தே வளருங்கள்
உழைப்பின் அத்தியாவசியத்தை அவசியம் ஊட்டுங்கள்;
நினைத்ததை அடையும் சிந்தனை சரியே
நினைத்தவுடன் அடைய வேண்டும் என்பது தவறே
காரியத்தில் நீ கொஞ்சம் கவனம் செலுத்து
காலம் கைகூடும் வரை கட்டாயம் காத்திரு;
வேதனைகளுக்கும் தோல்விகளுக்கும்
தற்கொலை ஒன்றும் முடிவில்லை
மரணத்தை நெருங்கும் துணிச்சல் உனக்கிருக்க
வாழ்க்கையை வாழும் தைரியம் ஏனில்லை?
ஒரு நிமிட முட்டாள்தனத்தால்
நீ நிம்மதியாக சென்று சேர்ந்திடுவாய்
என்ன பாவம் செய்தார் உன் பெற்றோர்
உனை பாதியில் இழக்க??
உனை சார்ந்தோரை சிந்தனை செய்வாயா
நண்பர்களின் ஞாபகத்தை நினைவில் கொள்வாயா
மகிழ்ச்சியான தருணங்களை மனதில் சேர்ப்பாயா
நீ தவறான முடிவுகள் எடுக்கும் முன்!!
போராட்டங்களை கடந்தால் தான்
தைரியங்கள் பிறக்குமே
கஷ்டப்பட்டு கிடைத்தால் தான்
அதன் அருமையும் விளங்குமே!!
வாழ்க்கை என்பது ஒன்றே!
தவறினால் மீண்டும் கிடைக்காதே!
ஒர் உயிரின் மதிப்பை உணர்ந்து
இவ்வுலகை ஆட்சி செய்வாயே!!!