போராளி

இறுகிய முகத்துடன்
இவன் தேடுகிறான்
தன் தேசத்தில்
மரிக்காத புன்னகையை

காயங்களின் வலிகளில்
இவன் தேடுகிறான்
திடமான மனோபலத்தை

திசைகள் இருண்ட பின்பும்
இவன் தேடுகிறான்
விடியலின் அஷ்தமிப்பை

எதிரியின் கண்களில்
இவன் தேடுகிறான்
இயலாமையின் பரிதவிப்பை

தோல்வியின் விளிம்பில்
இவன் தேடுகிறான்
வெற்றியின் ஆவேசத்தை

சருகாகும் வாழ்க்கையில்
இவன் தேடுகிறான்
ஓயாத தேடலை ....

எழுதியவர் : Ritha (19-Apr-12, 2:32 pm)
சேர்த்தது : Ritha
பார்வை : 225

மேலே