எனது பார்வையில் ரௌத்திரன்

!!!!!!!ரௌத்திரன் !!!!

இவன் எழுத்துலக தீவிரவாதி
கவிதை நிலத்தை
ஆழமாய் உழும் உழவன்
இவன் விதைக்கும் விதைகள்
விரைவில் பயிராகிவிடும் எதையும்
வீணாக பேசிவிடாத மௌன குரு

இவன் பொட்டல் காட்டு வெய்யில்
எவரையும் எளிதில் சுட்டுவிடுவான்
இவன் தட்டுபாடற்ற தமிழ்
யாருக்கும் எளிதில் பாடம் புகட்டி விடுவான்

நான் நக்ஸலைட் ஆகிறேன்
இவன் கவிதையில் ஒன்று
என் நரம்புகளை நசுக்கி
என்னையும் நக்ஸலைட்ஆக்க முனைந்தஒன்று

இவன் கவிதை நாகம் புகுந்த தாளம் பூ
வாசம் வீசுவதுடன் விசசீற்றமும் கெண்டவன்
தேன்குழைத்த மருந்தவன் கவிதை
நயம் கலந்தோ நல்லதை உரைப்பவன்

மிளகாய் கண்கள் கொண்டவன்
அழகாய் கவிதை சொல்பவன்
தீ தணலாய் என்னை தொட்டவன்
காயம் வாராமல் சுட்டவன்

எல்லோருக்கும் கவிதை தோழன்
எனக்கு மட்டும் கவிதை நண்பன்
தோழன் தோழ் கொடுப்பான்
நண்பன் நலம் வளர்ப்பான்

சுதாகண்ணன்!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (19-Apr-12, 6:19 pm)
பார்வை : 343

மேலே