அருகருகே நாம்........!!!
நாம் நடந்து பேச
பூமியும் போதாது
பாடி பறக்க
வானமும் பத்தாது
ஆகையால்
பூமியை உடைத்து
நாற்காலிகள் செய்து
வானத்தை பிடித்து
விசிறிகளாக்கி
அளவுகோளிலும் அடங்காத
மௌனத்தில் அமர்ந்திருப்போம்
அருகருகே நாம்........!!!