என் காதல் (அ) கவிதை

கண்கள் ஓரம் கண்ணீரும் வந்து
இன்று ஏனோ என்னை வாட்டுதே,
நெஞ்சின் ஓரம் உன் நினைவும் வந்து
இன்று ஏனோ என்னை கேட்குதே ,

இதுதான் காதலா
உன் நினைவும் ஊடலா
மனம் ஏனோ என்னையே தேடுதே!

கனவில் உந்தன் உருவங்கள்
உடன் எந்தன் உருவங்கள்
ஒன்று சேர்வது போலவே
காண்கிறேன்!

ஏன்? காதல் எனக்குள் வந்தது
உன் நினைவை சொல்லி சென்றது
நான் நினைக்கும் போதே கலைந்தது
அன்பே!

சுகங்களை போலவே வலிகளும்
உன் நினைவைத்தான் சொல்லுதே,
வலிகள் இல்லா சுகங்கள்
காதல் இல்லை என்றே!

உன்னிடம் பேசினேன்
என் தோழி ஆனால் என்ன,
என்னிடம் பேசினாய்
என்னை செருப்பால் அடிப்பேன் என்றாய்,

உன் பேச்சினில் கிடைத்த வரிகள்
பாடல் என்றேன் பெண்ணே
உன் பாடலின் பின்னணி
இசையாய்
என் அழுகை கேட்கும் கண்ணே,

என் வாழ்க்கையில் நீ இல்லை
உன் வாழ்க்கையில் நான் இல்லை,
ஏன்? எனக்குள் மயக்கம் என்ன!

எழுதியவர் : (24-Apr-12, 11:01 am)
சேர்த்தது : kames kamesh
பார்வை : 233

மேலே