வெகுமதி வேண்டாம்! நிம்மதி போதும்!

பெண்ணே! உன்னை நான் காதலித்த போது நீ
என்னை வெறுத்தாய்!
இருந்தபோதிலும் நான் உன்னை வெறுக்கவில்லை
மனதளவில்!
காலங்கள் கடந்து செல்லலாம் பெண்ணே! உன் மீது நான் கொண்ட காதல் என்றும் களையாது.
திசை மாறி போன பறவை ஆனாய்!
உன்னை திரும்பி பார்க்கும் பித்தன் ஆனேன் நான்
காதல் என்பது என்போன்ற ஏழைக்கு சாவாமருந்து!
உனக்கோ அதுவே விருந்து காதல் என்ற போலி விருந்து!
சிறகடித்து பறந்து சென்றாய் பெண்ணே! உன்னை நான் என் மனசிறகினில் வைத்ததால்!
பெண்ணே வெகுமதி வேண்டாம்! நிம்மதி ஒன்றை மட்டும் தா!

எழுதியவர் : ப.அய்யனார் (30-Apr-12, 3:38 pm)
சேர்த்தது : பஅய்யனார்
பார்வை : 174

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே