"அம்மாவும் என் கிராமமும்"
"அம்மா, பணம் பணம் என்று ஓடி வந்தேன்
ஊரைவிட்டு உறவைவிட்டு உன்னையும் விட்டு
உன்னை நினைக்க நான் மறந்திருந்தேன் என்னை மறக்க நீ மறந்திருந்தாய்
அன்பு என்றால் அது அம்மாதான் அது யாரும் சொல்லாமல் தெரியும்
நீ படும் துயரங்கள் அது பிறர் சொல்லித்தான் தெரியும்
அன்று, அன்போடு நீ கொடுக்கும் பழைய சோறுகூட இனிக்கும்
இன்றோ, சுடச்சுட சாப்பிடும் உயர்தர உணவுகூட கசக்கிறது
அன்று நீ என் கையில் கொடுத்தனுப்பிய ஒரு நூறுதான்
இன்று பல ஆயிரங்களாய் என் பையில் கிடக்கிறது
நலமாய் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையோடு
நாளும் நான் வாழ்கிறேன் இடியாய் செய்தியைக் கேட்கும்வரை
உன் உடல் நிலைமோசமென்ற தீ சொல் கேட்டே நான் துடிதுடிதுப்போனேன்
உன் வார்த்தை கேட்டபின்தான் கொஞ்சம் நிம்மதியானேன்
ஆறுமணிக்குமேல் ஆள்அறவமற்றுக் கிடக்கும் தெருக்களும்
நல்லிரவில் உலாவரும் ஐயனார் குதிரையும்
விடியும்போது கூவும் செவலும் விடிந்தபின் போடும் ஆற்றுக் குளியலும்
கண்ணுக்கழகான நெல்வயல் பசுமையும் புல்மேயும் ஆடுமாடுகளும்
வெள்ளந்தியான உள்ளங்களின் நேச விசாரிப்பும் வெளுக்கும் வெயிலும்
விட்டுவிட்டு வந்து இங்கு என்ன சுகம் கண்டேன்
இனியும் வேண்டாம் இந்த நகரத்தில் நரகம்
வேண்டும் இனி நம் கிராமத்து சொர்க்கம்
எனக்கும் என் அறிவுக்கும் அடைக்கலம் கொடுத்த இந்த நகரத்திற்க
வருவேன் மீண்டும் இந்த கிராமத்துக் குயில்
அன்பான அம்மாவோடும் கிராமத்து வாசத்தோடும்"