மகளிர்தினம்.....

மௌன மொழி பேசியவர்கள்
நாங்கள்....! - இன்று
கவிதை மொழி பேசுகின்றோம்!
எங்களின்
ஏக்கங்களும் நோக்கங்களும்
சொல்லப்படுவது எல்லாமே
இந்த எழுத்து மொழியில்தான்....
அன்னையாய்...குழந்தையாய்
ஆசிரியையாய்..மாணவியாய்
செவிலியாய்...தோழியாய்...
பல பிறப்புகள் எடுத்தாலும்
எங்களால் உங்களுக்கு
எடுத்துச் சொல்வதும்
எடுத்துக் காட்டுவதும்
அன்பென்ற அடைமொழியே....
எத்தனை எத்தனையோ
இழந்தாலும்
மீட்பதைப் பற்றி நினைக்காமல்
வலிகளையும் ரணங்களையும்
மறைத்து மறுத்து வாழ்ந்து
வருகின்றோம்....
உணர்வுகளின் துடிப்புகளில்
உள்ளத்து வேதனைகளையுடன்
உலா வருகின்றோம்....
உறவுகளிடமிருந்து விலக முடியாமல்...
பொறுமைக்கு பெயராகும் - எங்களுக்கு
இன்று உகந்தநாளாம்...!!
அப்படியென்றால் மற்றநாட்களெல்லாம்...??!!
எங்களின் மௌனங்களின் வெளிச்சத்தில்
மகளிரை மதித்து மனசால்
வாழ்த்துவோரையும் வணங்குகின்றோம்.....

எழுதியவர் : Premi (2-May-12, 2:00 pm)
பார்வை : 186

மேலே