நான் உங்களை அப்படி நினைக்கவில்லை

தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (2-May-12, 10:25 pm)
பார்வை : 424

மேலே