தாய் அந்தாதி

தாய்க்கு மழலையான
கன்னிப் பெண் பருவம் வந்ததும்
புது மணப் பெண் ...

புது மணப்பெண் அம்மா
ஆகிறாள் புகுந்த வீட்டில் ...

புகுந்ததும் கணவனுக்கு.
மழலை மடியாக ....

மடியின் மகிழ்ச்சியில்
ஈருயிர்களிடம் ஜனித்தது
குழந்தையாக...

குழந்தையை ஈன்றது
மழலைக்குத் தாயாக...

தாயின் மடியில் மகனுக்கு உறவாக
மருமகளின் வரவிற்கு மாமியாராக...

மாமியார் மகனின் குழந்தைக்கு
பாட்டியாக .... தாய்மை

தாய்மையின் பயணமே ...
வெற்றி தோல்வியில் ....

தோல்வியில் முடிவடையாத
பயணம் ..

பயணம் உலகம் உள்ளவரை
தாயன்பினில்.....!

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-May-12, 11:19 am)
Tanglish : thaimayin vettri
பார்வை : 354

மேலே