திருமதி அந்தாதி

மனைவி எதனையும் எதிர்பார்த்து
வருபவள் அல்ல சொந்தங்களிடம் ....

சொந்தங்கள் சொற்களால்
சுள்ளென்று பேசிபேசியே
கழுத்தறுப்பார்கள் அனுதினமும் ...

தினம் தினம் அந்த சொந்தங்கள்
மனத்தைக் காயப்படுத்தினாலும்
அவள் அவற்றை மறந்து விடுவாள்..

விட்டுக்கொடுத்து அவர்களை
வரவேற்பவள் நல்ல மனதோடு...
.
மனதில் நல்ல மனைவியான பின்னும்
அன்பை செலுத்துவதில் தங்கமானவள் ..

தங்கத்தைப் போல
சுத்தமான பாலைப் போன்ற
மனதுடையவள் கற்புடையவள்...

கற்பனையில் தன்னைப் பற்றி
இழிவாகப் பேசுபவர்கள் மத்தியில் ...

மத்தியில் நேரிலோ மறைமுகமாகவோ
நல்லவையோ தீயவையோ எதுவானாலும் ...

எதாவது பேசினாலும் அவர்கள் மீது
உள்ள பாசத்தினால் மறந்து ..

மறந்தும் தவறு செய்யாது
விட்டு விடுவாள்..மனைவியானதும் ....

மனைவி என்பவள் தனக்குப்
பிடிககாத வர்களாயினும் தன்னில் ...

தன்னில் குற்றம் இருந்தபின்னும்
தன்னைத் திருத்திக் கொண்டு பாசத்தால் ...

பாசத்தின் பங்கினை விட்டுக்
கொடுக்காதவள் கணவனிடம் ...

கணவனுக்குக் குழந்தையாக
குழந்தைக்குத் தாயாக

தாயாகி உற்றார் உறவினரிடம்
பெற்றோர் என அனைவரிடமும் பகிர்ந்து

பகிர முடியாத இரு கண்கள் போல
பாதுகாப்பவள் தான்
மனைவியே ...

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-May-12, 11:33 am)
பார்வை : 302

மேலே