பருவ உயிர் மூச்சுக்கள்
உலகில் உள்ள உயிர்கள் சுவாசிக்கும்
முதல் மூச்சு தாயிடம்தான்...
இரண்டாம் மூச்சு நாம்
வாழும் பூமியிடம்தான்...
மூன்றாவது மூச்சு ஏன் பிறந்தோம்
என்று அழும் அழுகை மூச்சுதான்..
நான்காவது நாம் பார்க்கும்
உயிர்-பொருட்களில் உணரும் மூச்சு...
ஐந்தாம் மூச்சு நம்மை படைத்த
இறைவனைப் பார்த்து சிரிப்பதுதான்..
ஆறாவது மூச்சு நாம் வாய் திறந்து
பேசும் மழலை பேச்சுதான்..
ஏழாவது மூச்சு நம்மை நாமே
உணரும் இளமை பருவம்தான்..
எட்டாவது நம் திறமை,வாழ்க்கை
பயிற்சிதான்..
ஒன்பதாவது நம் வாழ்வு
முடியும் இறுதியான மூச்சு
மண்ணில்தான்...