மயிருகூட சொந்தமில்லை !

எத்தனை வசதிகள் இவ்வாழ்வில்
அத்தனைக்கும் மனது ஆசைப்பட்டு
பெற்றிட தேடுதுபல வழிகள்
பலகுற்றங்கள் நடக்குது குருக்குபுத்தியால்

சுற்றிக்கொள்ள இலைதழைகள் போதுமென்று
சுதந்திரமாய் திரிந்த ஆதிவாசி
கண்டுபிடித்தான் எத்தனையோ காலபோக்கில்
வண்டுபிடித்த மாம்பழமாய் குணம்கெட்டதே

தர்மமாய் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்
தாங்குமளவு தலையிலே பாரம்வையுங்கள்
என்றுதான் எத்தனையோ சொன்னாலும்
ஒருசிலரோ கேட்டிலரே யார்குற்றம்?

மனிதனையும் படைத்தானே அவன்குற்றமா?
மலைமகுடு ஏற்றத்தாழ்வு அதில்குற்றமா ?
பொருள்பலவே கண்டானே அவைகுற்றமா?
போதுமென்ற மனதில்லையே அதுகுற்றமா?

பணம்மட்டுமே வாழ்க்கையை வழிநடத்துதே!
பஞ்சமாபாதகம் பரவி உள்ளதே !
அஞ்சாமல் குற்றங்கள் அரங்கேருதே !
அடுத்தவர் வளர்ச்சிக்கு அனைஉலரே!

அடித்துபிடுங்கி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு
அமைதியை அன்றோடு தொலைத்துவிட்டு
ஆகிறான் அவனியிலே தலைவனாய்
இழந்தவன் பழிவாங்க பார்க்கிறான் !

விடியும்போதே விடியல்கள் விசமாவதால்
தினம்தினம் சூரியனும் சூடாகிறான்
மடையனாக வாழ்கிறான் மனிதனிங்கு
மரணித்தால் மயிருகூட சொந்தமில்லை !

எழுதியவர் : மதனா (3-May-12, 1:09 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 254

மேலே