அம்மா

நின்றாலும் கால் வலிக்கும்
உட்கார் என்கிறாய்!
நெடுநேரம் அமர்ந்தாலும்,
களைப்பு என்றெண்ணி
கனிவு காட்டுகிறாய்!
வேகமாய் நடந்தாலும்,
"பார்த்து நட" என்று
பதட்டம் கொள்கிறாய்!
அன்பைக் குழைத்து
ஆண்டவன் செய்த
அற்புத உருவமம்மா நீ!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (10-May-12, 10:34 am)
பார்வை : 279

மேலே