எத்துனை எழுதினும் கழியாது பிள்ளையென நாம் பெற்ற கடன்
ஒரு முறை படைத்தான் ஆண்டவன்
வித்துக்கள் விருத்தினான் பாரிணிலவன்-மனிதனை
பாரெங்கும் பரப்பினான் அதனாலவன்-அன்னையரால்
உலகம் நிரப்பினான் அன்பாலவன்
கண்காணா கடவுளை
நம்ப மறுக்கும் மானுடனே
அன்னை இல்லா உயிருண்டா?
அன்பு என்பதை பார்த்ததுண்டா?
படைத்தவன் இருக்க
எங்கென்று மனிதன் கேட்கிறான்
அன்னை காலடி மறந்து
அவன் வாழ்கின்றான்
தன் உயிர்பிடித்து
உனக்கு உயிர் கொடுத்து
உதிரத்தை உணவாய் ஊட்டிய
அன்னையவளுக்கு இணையுண்டா?
அன்பின் இமயம் அவள்தானே
உண்மை இதயமும் அவளதுதானே
கடவுளின் சாயல் தரணியிலே
காட்டிடும் குலமே அன்னையரே
தன் குஞ்சு பொன் குஞ்சாம் காக்கைக்கும்
தன் உயிர் பணயம் வைத்து அதைக்காக்கும்
நிகரில்லா, திருப்பித்தர முடியா
கடன் தந்தாய் எல்லாப் பிள்ளைக்கும்
தங்கக்கரம் பூட்டணுமே உன் இரு கைக்கும்
தலைமீது சுமக்கனுமே வாழ் நாள் நெடுகிலும்
பத்து மாதம் சுமந்ததற்கும்
பக்குவமாய் வளர்த்ததற்கும்
நானுறங்க விழித்திருந்தாய்
பாலூட்ட பசித்திருந்தாய்
சிறந்ததையே எனக்களித்தாய்
எஞ்சியதையே நீயெடுத்தாய்
வேலைப்பழுக்களிலும் முழு நேரம் எனக்காக
கனப்பொழுதுகளிலும் நீ இன்றி நான் வாட
சிறிதேனும் குறையின்றி சீராட்ட
நித்தம் என்னை ஏந்தித்தாலாட்ட
நீ தந்த அன்புக்கு இணையேது
உன் மடிமீதிருந்த நாட்கள் இனியேது
மீண்டு வந்த நாட்கள் மீளாது
உயிருள்ளவரையவை ஓயாது