முதலும் இறுதியும்(குறுங் கவிதைகள் )

உன் மவுனத்தின்
கேள்விகளுடன் எழுகிறது
ஒரு பறவை !

உன் பார்வையின்
மொழிகளுடன் விழுகிறது
நட்சத்திரங்கள்.!

உன் புன்னகையின்
புன் சிரிப்பு தெரிகிறது
நிலா ஒளியில்!

உன் சுவாசத்தின்
ராகங்களுடன் உன் குரல்
என் மரணக் காதுகளில்!

உன் நிழல் என்னோடு
துணையாய் வருகிறது
வாழ்வொளி அமைத்திட..!

என் அன்பு உன்னோடு
துணையாய் உறவாட
உயிர் உள்ளவரை ....!

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-May-12, 5:51 pm)
பார்வை : 295

மேலே