பெண் பார்க்கும் படலம்

எனக்கானவன்
இவன்தான் என்று
நான் குறிக்க
எனக்கிருப்பதோ
இந்த நிமிடம் மட்டுமே
என்று
கதவிடுக்கு வழியாக
கவலை சிந்துகின்றன
வருங்காலக் கணவனை
கண்டுகொண்டிருக்கும்
அந்த மை தீண்டிய
மான்விழிகள்!

யார் யாரை காதலித்தாளோ?
என்னவளாகப்போகும்
இவள் என்று
மாப்பிள்ளை
கையில் இருக்கும்
காபிக் கோப்பை
எதிர்மறை சிந்தனைகளை
சுடு ஆவியாக
வெளியேற்றிக் கொண்டிருந்தன
அவன் மனம் எனும்
வரவேற்பறையில்!

இரு மனங்களின்
எண்ணச் சிதறல்கள்
எவர் காதிலும்
விழாததால்தானோ என்னவோ
எந்த ஒரு இடையூறுமில்லாது
எல்லோரும் சேர்ந்து
நாட்குறித்து கொண்டிருந்தனர்
செல்வன் அவனும் செல்வி இவளும்
என்று கூறியவாறு...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (13-May-12, 8:21 pm)
பார்வை : 306

மேலே