கவிதையும் கருத்தும் --நட்சத்திர கவிஞன் கவின் சாரலன்
கவிப்ரிய பிரேம்குமார் தாங்கள் இந்த
ஆராய்சிக் கட்டுரையில் பல் வேறு
கருத்துக்களை நுணுகி ஆராய்ந்து
சொல்லியிருக்கிறீர்கள் எழுத்தினை
எண்கொண்டு தீர்மானிக்கலாமா என்ற
நியாயமான கேள்வியை கேட்காமலே கேட்டிருக்கிறீர்கள். தேர்ந்தவர்கள்
கவிதையை தெரிவு அல்லது தேர்வு
செய்வதே சாலச் சிறந்தவழி நொடிக்கு
நூறு கவிதை பதிவாகும் தளத்தில்
இது சாத்தியமில்லை அதன் மாற்றாக
எண் குறியீட்டிலான இந்த பொதுவான
சாதாரண பிரபல்யமான (popular ) வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்
ஆயினும் இதன் சாதாரணத் தன்மையை நீக்கும் பொருட்டு நல்ல முயற்சி நல்ல படைப்பு சிறந்த படைப்பு சூப்பர் நெகிழவைக்கிறது போன்ற
விமரிசன அடையாளங்களை யோசித்து
நட்சத்திரங்களுக்குள் அமைத்திருக்கிறார்கள் பின் இந்தமுறை சரிதானா ? வேறு வழியில்லை
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
மேலும் சிலர் பல கணக்குகளை திறந்து
வைத்துக் கொண்டு தங்களுக்கு தாங்களே
நட்சத்திர நன்கொடை வழங்கி தங்கள்
கவிதையை சிறந்த படைபென்றோ
பரிசிற்க்குரியதாகவோ முன் நிறுத்திக்
கொள்கிறார்கள் இந்த போலியான
செயற்கையான அங்கீகாரத்தால்
இவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்
கொள்வதோடு எழுத்தையும்
சக கவி நண்பர்களையும் ஏமாற்றுகிறார்கள் clever souls இந்த மாதிரி எத்தனை ஆத்மாக்கள் உலவுகிறதோ தளத்தில்.இவர்களுக்கு
நாம் அனைவரும் அளிக்கவேண்டிய
"மதிப்பெண்" 420 . பழுது படைப்பானால்
என்ன பரிசானால் என்ன யாருக்கு
லாபம் ? இது ஒரு இலக்கிய மோசடி
இதனால் நல்ல கவிதை படைக்கும்
நற் கவிஞன் தனக்குரிய இடம்
அங்கீகாரம் கிடைக்காமல் மனம்
வெதும்பி எழுதுவதை நிறுத்தி விடுகிறான் இது எழுத்துக்கும் நட்டம்
கவிஞனுக்கும் இழப்பு ஆதலினால்
இந்த நட்சத்திர எண் குறியீடு மதிப்பீடு
குறை பாடுடைது என்பது என் மிகவும்
தாழ்மையான கருத்து . தவறானவர்கள் அதை
தவறாகப் பயன் படுத்துகிறார்கள் அதனால் நற் கவிஞனின் வளர்ச்சியும்
எழுத்தின் வளர்ச்சியும் தரமும்
பாதிக்கப் படுகிறது ஆகையால்
பிரேம்குமாரின் இக்கருத்தின் முதல்
பகுதியை ஏற்கிறேன்
"படைப்பாளியை அதிகம் ஊக்குவிக்க, வாசகனுடனான நற்கருத்துப்பரிமாற்றலோ (அ) நற்கருத்துயுத்தமோ-தான் மிக முக்கியம்."
இரண்டாவது பகுதி யுத்தமாகத் தொடங்கி காழ்ப்பிலும் கசப்பிலும்
அசிங்கமாக சேறு வாரி இறைப்பதிலும்
முடியும் ஆதலினால் நாகரிகமான
கருத்துப் பரிமாற்றம் கவிதையையும்
கவிஞனையும் இந்த இனிய எழுத்துத்
தளத்தையும் வானளவுக்கு உயர்த்தும்
கருத்தே சாலச் சிறந்தது
யாமறிந்த இணையதளம்களிலே
எழுத்தினைப் போல் ஓர் இனியதளம்
எங்கும் காணேன்
பாமரராய் விலங்குகளாய் அங்கும் இங்கும்
அலைந்து பறந்து திரிந்திடாமல்
பயில்தொறும் நூல் நயம்போல்
பண்புடையாளர் தொடர்பு போற்றி
வாழ்ந்திடுவோம் வளர்ந்திடுவோம்
ஏன் ?
எழுத்து --அழகிய தமிழ் சொர்க்கம்
அங்கே தமிழ்க்கு அமுதென்று பேர்
----அன்புடன்,கவின் சாரலன்
கவிக் குறிப்பு : கவி நண்பர் பிரேம்குமார் தளத்தின்
எண் குறியீடுகள் மதிப்பீடுகள் பற்றி எழுதிய
கட்டுரைக்கு வரைந்த பதில்