அன்று நீ மெழுகுவர்த்திரி...! இன்று உலகின் அணையா தீபம்....!
யுகோஸ்லேவியா நாட்டில் 1910 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 -ஆம் நாள் மளிகைப் பொருட்கள் விற்க்கும் நிகோலே மற்றும் டிராண்டாஃபில் பொஜாஹியூ என்பவர்களால் கொளுத்தி வைக்கப்பட்ட மெழுகுவர்த்திரியே....
எழுவயதிலேயே மெழுகுவர்த்திரியை ஏற்றி வைத்தவரில் ஒருவருவராம் தன் தந்தையை இழந்த போதிலும் அணையாமல் உருகாமல் எரிந்த மெழுகுவர்த்திரியே...
பன்னிரெண்டு வயதிலே ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை தன்னில் புகட்டிய எழையின் மெழுகுவர்த்திரியே....
ஜெஸ்யூட் என்கின்ற அங்கத்தில் சேர்ந்து அங்குள்ள பல மெழுவர்த்திரியுடன் இணைந்தும் எரிந்த அணையா மெழுகுவர்த்திரியே...
பதினெட்டு வயதிலே துறவு என்னும் வாழ்க்கையை தேடி ஃபிரான்ஸ் நாட்டிற்க்கு பயணம் சென்று பயிற்ச்சி பெற்று அயர்லாந்திலும் ஒரு வருடம் சுடற் ஒளி வீசிய மெழுகுவர்த்திரியே...
1931-ஆம் ஆண்டு மே 24-ல் நாள் அன்று இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற இலச்சிய தீபத்தையும் தன்னில் ஏற்றி வைத்த இந்தியாவின் மெழுகுவர்த்திரியே...
ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியாராய் திகழ்ந்து தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற புவியியல் பாடத்தை புகட்டிய கல்வியின் மெழுகுவர்த்திரியே...
ஏழு வருடம் வேலை பார்த்தும் கூட கையில் தேவ புத்தகமும் கழுத்தில் சிலுவை மாலையும் வெறும் ஐந்து ரூபாய் பணத்தோடு வெளியே வந்து தன் சேவை செய்ய துவங்கிய சேவையின் மெழுகுவர்த்திரியே....
1948 -ஆம் ஆண்டு டிசம்பர் 21 -ஆம் நாளன்று கதவு, பெஞ்சு, இருக்கை,எழுத கரும்பலகை கூட வைக்க முடியாத சூழ்ந்நிலையிலும் பள்ளிக்கூடத்தை கட்டி தன் முதல் சேய்வையாக துவங்கிய கல்வியின் மெழுகுவர்த்திரியே....
வெளிநாட்டிலும் தன் சேவையை செய்ய விமான செலவுக்காக விமானப் பணிப் பெண்ணாகவும் பணிபுரிந்த விமான மெழுகுவர்த்திரியே....
உதவி என்று தான் கேட்ட வார்த்தைக்கு தன் எச்சிலைக் காரி உமிழ்ந்த செல்வந்தரிடம் சிறிதும் கோபப்படாமல் பின்பும் "நீங்கள் கொடுத்த எச்சில் எனக்கு போதுமானது ஆனால் என் ஏழைக் குழந்தைகளுக்கும் ஏதாவது கொடுங்கள்" என்று அடுத்த கையையும் நீட்டி அமைதியாக எரிந்த மெழுகுவர்த்திரியே....
தொழுநோயாளிகளின் புண்களை எந்த அருவருப்புமின்றிக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளித்த அன்பின் மெழுகுவர்த்திரியே....
ஒண்றா இரண்டா விருதுகளும் பரிசுகளும் இந்தியாவா இல்லை அமெரிக்காவா சொன்னால் சொல்லி கொண்டே போகலாம் மெழுகாய் எரிந்து ஒளி வீசிய நாடுகளின் பட்டியலையும் உன் அருஞ்செயல்களை....
மெழுகு உருகிய பிறகும் உலகத்தின் எல்லைப்பகுதி எங்கும் இன்றும் ஒளி வீசி கொண்டு இருக்கும் அணையா தீபமே.....