வெற்றி நண்பன்

என் வெற்றிகளுக்காக
எத்தனையோ தோல்விகளை சுமந்தவன் ,
என் சுமைகளில் பங்கெடுத்துக்கொள்ளும்
என் நிரந்தர நண்பன்!
என் கண்ணீரை துடைக்கும்
முதல் ஆறுதல் கரம் ,
என் சோர்வுகளை சுறுசுறுப்பாக்கும்
நம்பிக்கை கைகள் !
கருவறையில் இடம் கொடுத்தால்
என் தாய் ,
நீ எனக்காக சற்று மேலே ,
உன் இதயத்தில் !
உன் புன்னகை ஒன்றில் !
நண்பா உன் கை பிடிக்கையில் ,
உலகம் எளிதாய் ,
ஆயிரம் தடைகளை உடைக்கும்
புது தெம்பு என் உடலில் வந்ததாய்!
சாதி மதங்கள்
நம்மில் இல்லை ,
வறுமையும் வசதியும்
இடைவெளி இல்லை ,
கருப்பு வெள்ளை
இனங்களும் இல்லை ,
நாமெல்லாம் ஒரே இனம்
"நண்பர் இனம் "!
நட்பில் நாங்கள் நிரந்தரமாய்
நண்பர்களாக
நம் நட்பின் உறவில் ,
உன் தியாகங்கள் எத்தனையோ !
இனி நான் நீ என வேண்டாம்
நாம் என்பதே போதும் !

எழுதியவர் : ர கலையரசன் (17-May-12, 3:55 pm)
Tanglish : vettri nanban
பார்வை : 725

மேலே