புரியாத வாழ்க்கை (பகுதி - 3) - பெற்றோர்கள் கவனத்திற்கு
குழந்தைக்கு,
மாநகரத்திலேயே முதன்மைப்பள்ளியில்
Pre-KG - க்காக
மூன்றுவயதிருக்கும்போதே
முன்பணம் கொடுத்து பதிவுசெய்வது....
பதினைந்தாம் வயதிலேயே,
வெளிநாட்டு பட்டப்படிப்பிற்காக
முன்னதாகவே பணமுன்பதிவுசெய்து
பிள்ளையையும் இயந்திரம்போல் தயார்செய்து
பதினேழு, பதினெட்டு வயதில்
வெளிநாடு அனுப்பிவைப்பது.......
பிறகு வெளிநாட்டில்,
இயந்திரம்போல் வாழ்ந்தபிள்ளை
இயந்திரநாட்டிலேயே வாழநினைக்குது...
முட்டாள் தகப்பன்,
தான் சாதிக்காததைஎல்லாம்
தன் மகன்தலைமேல் ஏற்றிவைத்தான்
அதன்மேலே பணமூட்டையை தூக்கிவைத்தான்
இன்று,
இறந்த தகப்பன் பிணமூட்டையென,
இறந்த உடலுக்கு தீ கொடுக்காது
வெளிநாட்டிலுள்ள நட்புவட்டாரதுடன் Bar-க்குசென்று பீர் கொடுக்கிறான்.
குறிப்பு: இப்படைப்பு, என் கட்டுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.