நிறம் மாறும் உலகமும் நிலை மாறா பாலிதீன் பைகளும்
ஏழு வண்ணங்களில் இருப்பேன்
ஏழு ஜன்மமும் உன்னை தொடர்வேன்...
நீ செய்த பாவம் நான்...
வீடுதோறும் இருப்பேன்
விளக்கல்ல!
விலக்கமுடியது என்னை இனி,
உன் தலைவிதி நான்..
மின்னிகொண்டே இருப்பேன்
மின்மினி அல்ல..
என்னை உண்ட
மண்ணின் குடலை அறுக்க
வந்த வைரம் நான்...
காற்றில் பறந்து ஆகாயம் செல்வேன்...
அதனால்
பட்டம் என்று
எண்ணிவிடப்போகிறாய் என்னை!
மண்ணை வீடாக்கி,
உன் அழுக்கையும்,
நீ போடும் குப்பையையும்
உண்ணும் நுன்னுயிரிக்கே
காலன் நான்....
கைவீசிக் கடைக்குச்சென்று
நீ வாங்கும் பொருள்களை சுமக்கும்
சுமைதாங்கி என நினைத்தாயோ?
உன் சுவாசமான ஆக்சிஜனை
இந்த மண்ணில் இருந்து
யமலோகம்
அனுப்பும் பாசக்கயிரடா!
என்ன செய்துவிட முடியும்
உன்னால்
டாஸ்மார்க் கடைகளில்
தடை செய்ய முடியும்!
அங்குகூட தண்ணீரை
பாக்கெட்டில்
தானடா கொடுக்கிறார்கள்....
நீ கடையில் சாப்பிடும்
இட்லிக்குக்கூட
நான்தான் அடித்துனியாய்...
தண்ணீரும்,குளிர்பானமும்,
பழரசமும்,பருப்பும்,புலியும்,
டியும், பன்னும்
என்றோ என்னுள் அடங்கிவிட்டன...
எப்போது
என் முதல் தலைமுறை உருவானதோ,
அன்றே உங்கள் அழிவு
நாட்காட்டியில் அச்சாகிவிட்டது..
கடைக்குசெல்லும் உன்னால்
ஒரு கூடை கொண்டுசெல்ல
முடிவதில்லை...
குப்பைகளில் கூட என்னைத் தனியாய்
பிரிக்க உனக்கு
நேரமில்லை...
மறுசுழற்சி செய்ய
மனமில்லை...
மாற்று வழி தேட மூளை
வேலைசெய்யவில்லை...
கூச்சமே இல்லாம இத்தனையும்
செய்தாய்...
இனி எங்கள் காலம்........
தொடங்கட்டும்
உங்கள் கற்காலம்....