நானும் ஒரு தகப்பன்

பள்ளி ஆசிரியன் ,
போதிப்பதிலும் போதனையிலும் ,
நல்ல பேர் எனக்கு
சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் ,
பலமுறை என் கைகளை
அலங்கரித்து இருக்கிறது !

ஊரே கௌரவத்தோடு பார்க்கும்
ஒரே ஆசிரியன் ,
என்னைப்போன்றவர்கள் ,
எனக்கும் மேலானவர்கள் இருக்கையில் ,
எங்கள் ஊரில் நான் மட்டும் ,
வசதி கொஞ்சம் அப்படி இப்படித்தான் ,
அரசிடம் கடன் வாங்கி கட்டிய
ஒரு சிறு வீடு !

எல்லாம் நல்லதாய் போக
என் வீட்டில் என் மகன் ,
வரம் வாங்கி பெற்ற பிள்ளை என்பதால்
செல்லம் கொஞ்சம் அதிகமாய் போக ,
கட்டுப்பாட்டின் வலயத்திற்கு வெளியே !

சுதந்திர பறவையாய் சுற்றியவனாய் ,
பள்ளி போதனையை
வீட்டிலும் விடாமல் போதித்திருக்கிறேன் ,
என் மாணவர்கள் சாதனைகள் சாதிக்க ,
மகம் மட்டும் மக்காய் ,
"வாத்தியார் வீடு பிள்ளை மக்கு "
என்னும் பழமொழியை
என் மகன் பலித்து கட்டிவிட்டான் !

கௌரவமான ஆரிரியனாய் தளநிமிர்ந்தாலும் ,
பொறுப்பான அப்பா விஷயத்தில் ,
தலை குனிந்தவனாய் ,
என் மனைவியின் ஓயாத அறிவிரைகளில் ,
ஒன்றில் கூட அவள் ஜெயித்ததில்லை ,
படித்து படித்து சொல்லியும்
ஒரு பட்ட படிப்புகூட முடிக்கவில்லை !

கலாசார மாற்றத்தில் கட்டுப்படாத காளை அவன் ,
வயதாக வயதாக விதி என் வேகத்தை குறைக்க ,
பொறுப்பை அவன் தலையில் சுமத்தும் காலம் ,
கால் கட்டு ஏற்பாடுகள் தடபுடலாய் நடக்க வாத்தியார் வீட்டுபிள்ளை
என்கிற அடையாளம் தவிர
அவனிடம் ஒன்றும் இல்லை !

நான் பொறுப்பை சொன்னதெல்லாம்
அவன் விளையாட்டாய் காற்றில் விட
விதி அவனை வெறும் பையனாக ஆக்கியது!

மனம் முடிந்து மாதங்கள் ஒன்றிரண்டு ஆக,
மனக்கசப்புகள் மெல்ல தொடர்ந்து ,
தொடர்கதையாய் ,
பூ வாங்கி கொடுக்க கூட அப்பாவைத்தான்
காசு கேட்கணுமா ,
மருமகளின் நியாயமான கேள்வி !

விளையாட்டு பிள்ளையாய் திரிந்த ,
அவனுக்கு பணத்தின் தேவை அதிகரிக்க
வேலை தேடியும் கிடைத்தபாடில்லை ,
உழைத்து பழகாதவன்
கூலி வேலைக்கும் தகுதியிழந்தான் !

சில்லறை பிரச்சனைகளுக்கு கூட அடிக்கடி சண்டை ,
என் பென்சனில் பாதியை
வீட்டுக்கடன் பிரித்து போக ,
பற்றாகுறையிலே எங்கள் மாத பட்ஜெட் !

இளவட்டங்கள் என்பதால் ,
சிறுவீடு என்பதாலும் ,
நானும் மனைவியும் பென்சனின்
வருமானத்தில் பாதியை மகனிடம்
கொடுத்து நாங்கள் ஒரு சிறுவீடு தேடி பறந்தோம் !

வாழ்க்கை புயலில்
ஊசலாடிக் கொண்டிருந்த மகன் வாழக்கை ,
விரக்தியின் விளிம்பில்
வேரோடு சாய்ந்து
மகன் ஒரு நாள் மரணம் பார்த்தான் !

மங்கலமாய் வந்த மருமகள்
அவமங்கலமாய் அன்னை வீடிற்கு
திரும்பினால் ,
ஒழுக்கமான ஆசிரியன் சிறந்த ஆசிரியன்
விருதுகள் படைத்தேன்,
வீட்டில் கவனம் செலுத்த தவறிவிட்டேன்
நான் சம்பாதித்த சொத்துகள் இருக்க ,
நாங்கள் சாதனையாக பெற்ற
"மகன் போனான் மரணம் தேடி "!

எழுதியவர் : வினாயகமுருகன் (27-May-12, 12:13 pm)
பார்வை : 269

மேலே