நடத்துங்கள்
உங்கள் மேடை !
உங்கள் நாக்கு!
எது வேண்டுமானாலும் பேசுங்கள் !
உங்கள் பேனா !
உங்கள் இஷ்டம் !
எது வேண்டுமானாலும் எழுதுங்கள் !
உங்கள் தூரிகை !
உங்கள் வர்ணம் !
எது வேண்டுமானாலும் வரையுங்கள் !
ஆனால்...
நாளை...
காலத்தின் விமர்சனம்
`உங்கள் பிணத்தைக் கூடத்
தோண்டியெடுத்து வந்து
தூக்கில் போடும் '.
என்பது மட்டும்
ஞாபகம்
இருக்கட்டும் !