உனை காண காத்திருப்பேன்
இன்று வருவாய் என,
நேற்றிருந்தேன்,
நாளை வருவாயென,
இன்றிருக்கிறேன்,
இன்று மட்டுமல்ல,
எனைவிட்டு நீ சென்ற,
அன்று முதல்,
என் விழி எங்கும்,
வலியோடு காத்திருக்கிறேன்,
உன்னை காணாததால்
இன்றல்ல நேற்றல்ல,
இனி என்றென்றும்,
காத்திருப்பேன் உன்னை காண்பதற்கு....!