பெட்ரோல் விலையும் படித்த முட்டாள்களும்
அடிதடி!
ஆர்பாட்டம்!
செய்வோம் என்று சொன்னவன்
இன்று
நிற்கிறான்
வரிசையில்
பெட்ரோல் பிச்சை கேட்டு!
மேலாண்மை படித்தவனின்
மூலையில் உதித்த
எளிய வழி!
ஒன்று இல்லாத போது
எப்பாடுபட்டும் அடைய
நினைப்போம் அதை!
ஏன் பழிக்கிறாய்
எண்ணெய் நிறுவனங்களை?
காரணம் நீ!
இளநீர் தவிர்த்தாய்!
cock, Pesi பட்டிதொட்டி எங்கும்
பரவியது வியாதியாய்!
சோளமும்,கம்பும்
தவிர்த்தாய்!
KFC,pizaa, burger என்று
கெட்டுப்போனதை குடும்பமாய்
உண்கிறாய்!
பற்பசை,சோப்பு முதல்
உள்ளாடை வரை
இந்தியத் தயாரிப்புகளை தவிர்த்தாய்!
அந்நிய நாட்டு முதலைக்கு
இந்திய நாணயம்
அடமானம் வைத்தாய்!
கடன் அட்டை
உன் சமுதாய அடையாளமாய்!
காரும் பைக்கும் கவ்ரவமாய்!
இத்துனை வருட சுதந்திரம்
மெல்ல மெல்ல
அயல்நாட்டு மோகத்தில்
உன்னை அடிமை படுத்தவே
பயன்பட்டது!
ஏலம் முடிந்த பின்
வெட்டிக்கூச்சல் எதற்கு?
யாருக்கு நன்மை செய்யும்
இந்த பாரத் பந்த்!
கண்கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம்!